< Back
மாநில செய்திகள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்

Image Courtesy : @IndiainSL

மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்

தினத்தந்தி
|
3 Aug 2024 6:32 PM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சென்னை,

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இது குறித்து கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் 21 மீனவர்களும் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களின் பயண ஆவணங்களை இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் 21 மீனவர்களும் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தனர்.

மேலும் செய்திகள்