< Back
மாநில செய்திகள்
21 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடவடிக்கை
சேலம்
மாநில செய்திகள்

21 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடவடிக்கை

தினத்தந்தி
|
22 Feb 2023 2:00 AM IST

21 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஆத்தூர்,

ஆத்தூர் அருகே உள்ள அரசநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கோழி பண்ணையில் கடந்த 18-ந் தேதி சேலம் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ராஜேஷ் குமார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது 7½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், மக்காச்சோளத்துடன் ரேஷன் அரிசி அரைத்து கலந்து கோழிகளுக்கு உணவுக்கு வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோழிப்பண்ணை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மல்லியக்கரை, கருத்த ராஜாபாளையம், அரசநத்தம், கந்தசாமி புதூர் பகுதிகளை சேர்ந்த 21 ரேஷன் கடைகளில் விற்பனையாளர்களுக்கு ஆகியோர் தனியார் கோழிப்பண்ணைக்கு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை பதுக்கி விற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த பகுதியில் உள்ள 21 ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், சார்பதிவாளர் அறிவழகன் ஆகியோர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் ே்ரஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்