< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 21 லட்சத்து 67 ஆயிரம் பேர் பிறந்தநாள் வாழ்த்து
|5 March 2023 5:42 AM IST
இரும்பு தடுப்புகளுக்கு சரியான மாற்றாக இந்த மூங்கில் தடுப்பு விளங்குவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் செல்போன் மூலம் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்போன் மூலம் 21 லட்சத்து 67 ஆயிரத்து 411 பேர் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கின்றனர். பதிலுக்கு பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் அவர்களது எண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்