< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
21 அடி நீளம் அலகு குத்தி வந்த பக்தர்கள்
|11 July 2022 6:09 PM IST
வேடசந்தூரில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது
வேடசந்தூர் அய்யனார் நகரில் விநாயகர், மதுரைவீரன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. கோவில் திருவிழாவையொட்டி அம்மன் கரகம் அலங்கரித்து வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் வேடசந்தூர் குடகனாற்றில் இருந்து 2 பக்தர்கள் 21 அடி நீளமுள்ள வேல் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனையடுத்து பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிப்பட்டனர். விழாவில் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டுடன், அம்மன் கரகம் பூஞ்சோலை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.