< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பதுக்கி வைத்த 21 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது
|16 Jun 2022 10:41 PM IST
பதுக்கி வைத்த 21 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்- இன்ஸ்பெக்டர்கள் செந்தில் முருகன், முரளி, ராமச்சந்திரன், செந்தில்குமார், முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது செக்கோடி-சின்னசவுலூர் சாலையில் பத்ரகாளியம்மன் கோவில் அருகே 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கு பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.