< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
ஊர்க்காவல் படையில் 28 பணியிடங்களுக்கு 208 பேர் பங்கேற்பு
|7 Oct 2022 12:01 AM IST
ஊர்க்காவல் படையில் 28 பணியிடங்களுக்கு 208 பேர் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்க்காவல் படையில் காலியாக 28 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதனை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன், ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் ஜீவானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 183 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 208 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு அளத்தல் நடைபெற்றது.