865 பெண்கள் உள்பட தமிழகத்தில் 2,033 பேருக்கு கொரோனா
|தமிழகத்தில் நேற்று புதிதாக 1,168 ஆண்கள், 865 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 33 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1,168 ஆண்கள், 865 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 33 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 466 பேர், செங்கல்பட்டில் 217 பேர், கோவையில் 187 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.மேலும், 12 வயதுக்குட்பட்ட 79 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 324 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 791 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 84 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 16 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 371 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 45 பேரும், கோவையில் 1,207 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.தொடர்ந்து 7-வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.