< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
குடோன் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
|27 Jan 2023 1:29 AM IST
குடோன் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டுபோனது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 45). இவர் பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியில் பழைய பேப்பர் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை மீண்டும் குடோனுக்கு வந்து பார்த்தபோது, குடோனின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் குடோனில் கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.