விருதுநகர்
2 ஆயிரம் ஆண்டு பழமையான பானை கண்டெடுப்பு
|விஜயகரிசல்குளம் அகழாய்வில்2 ஆயிரம் ஆண்டு பழமையான பானை கிடைத்து இருக்கிறது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் கிராமத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நாகரிகத்தோடு வாழ்ந்்ததற்கான சான்றுகள் தொல்பொருட்களாக கிடைத்து வருகின்றன. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சற்று பெரிய அளவிலான பானை கிடைத்து இருக்கிறது. அதே பகுதியில் சிறிய பானைகளும் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன.
தற்போது அங்கு அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கு வளையல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்திருக்கலாம். அந்த ஆலையில் இருந்தவர்கள் குடிநீருக்காக இந்த பெரிய பானையை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவிக்கிறார்கள். 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தையதாக கருதப்படும் அந்த பானை குறித்து தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதே போல் புதிதாக தோண்டப்பட்ட 15-வது அகழாய்வு குழியில் நேற்று சிவப்பு, பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் கண்ணாடி பாசிமணிகள் ஏராளமாக கிடைத்தன. இந்த பாசி மணிகளை முற்காலத்தில் பெண்கள் ஆபரணமாக பயன்படுத்தி இருக்கலாம்.