< Back
மாநில செய்திகள்
செயல் அலுவலர் நிலை 4 தேர்வை 2 ஆயிரம் பேர் எழுதினர்
திருச்சி
மாநில செய்திகள்

செயல் அலுவலர் நிலை 4 தேர்வை 2 ஆயிரம் பேர் எழுதினர்

தினத்தந்தி
|
12 Sept 2022 2:40 AM IST

செயல் அலுவலர் நிலை 4 தேர்வை 2 ஆயிரம் பேர் எழுதினர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 4 (குரூப் 8) ேதர்வு நேற்று காலை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 3,913 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் 12 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தது. முன்னதாக தேர்வுக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மொத்த விண்ணப்பதாரர்கள் 3,913 பேரில் நேற்று நடந்த தேர்வுக்கு 2,000 பேர் வந்து இருந்தனர். 1,913 பேர் தேர்வுக்கு வரவில்லை. இது 48.89 சதவீதமாகும்.

மேலும் செய்திகள்