< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை - 3 தனிப்படைகள் அமைப்பு
மாநில செய்திகள்

புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை - 3 தனிப்படைகள் அமைப்பு

தினத்தந்தி
|
24 July 2022 2:18 PM IST

புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் பூட்டையும் உடைத்து 10 சவரன் நகையை திருடி சென்றனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்