< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
|11 April 2024 11:33 AM IST
காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கியுள்ளதாக மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பன்,
திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற கடற்கரை பகுதிகளில் கடல் உள்வாங்கும் சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படும். சிறிது நேரத்தில் இயல்புநிலைக்கு திரும்பிவிடும்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடல் திடீரென 200 மீட்டர் வரை உள்வாங்கி காணப்பட்டது. கடல் உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரை தட்டி நிற்கின்றன. காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கியுள்ளதாக மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.