< Back
மாநில செய்திகள்
காரில் கடத்தி வரப்பட்ட 200 மதுபாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

காரில் கடத்தி வரப்பட்ட 200 மதுபாட்டில்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
22 May 2023 12:15 AM IST

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 200 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது

விழுப்புரம்

விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி அருகே வீடூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் இருந்த அட்டைப்பெட்டிகள் மற்றும் கை பையை பார்த்தபோது அதில் 200 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த குமார்(வயது 62), வாலாஜா சுப்பிரமணியன்(60), காட்பாடி குமார் மனைவி மஞ்சுளா(46) என்பதும், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்காக வேலூருக்கு காரில் கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தொியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காருடன் 200 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்