< Back
மாநில செய்திகள்
தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சேலம்
மாநில செய்திகள்

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
7 Jun 2022 1:23 AM IST

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம்:

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமி பலாத்காரம்

சேலம் அருகே தும்பிபாடி ரெட்டியூரை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி சேலத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

20 ஆண்டு சிறை

அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் செல்லப்பன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி செல்லப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்