< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில்ஜிம் உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில்ஜிம் உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
19 April 2023 12:10 AM IST

திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை கடத்தி, பலாத்காரம் செய்த ஜிம் உரிமையாளருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஜிம் உரிமையாளர்

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரையை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 28). ஜிம் உரிமையாளர். இவரது சகோதரியும், கிருஷ்ணகிரியை சேர்ந்த, 17 வயது கல்லூரி மாணவியும் தோழிகளாக இருந்துள்ளனர். இதை பயன்படுத்திய சிரஞ்சீவி கிருஷ்ணகிரி கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

அவரை திருமணம் செய்வதாக கூறி கடந்த, 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி கடத்தி சென்று பலாத்காரம் செய்தார். இது குறித்து கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி தன் பெற்றோரிடம் கூறினார். உடனே மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரணை நடத்தி சிரஞ்சீவியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

20 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.

அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட சிரஞ்சீவிக்கு, சிறுமியை கடத்தியது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றங்களுக்காக, 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்