< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
20 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
|19 July 2023 11:36 PM IST
20 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
கரூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட வேட்டைக்காரன்புதூர் குடியிருப்பு பகுதியில் பள்ளிக்கு செல்லாமலும், இடைநிலை நின்ற மாணவ-மாணவிகளும் இருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கிருபாவதி, வட்டார கல்வி அலுவலர் மணிமாலா, வெண்ணைமலை, பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்த பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 20 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களது பெற்றோர்களிடம் பேசி, 20 மாணவ-மாணவிகளையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.