< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
8 Dec 2022 2:29 PM IST

ஆவடி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

ஆவடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 63). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது மனைவி ரேணுகாவை பார்க்க சென்றுவிட்டார்.

நேற்று காலை இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 17 பவுன் நகை மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியில் வசிக்கும் பால்வாடி ஊழியரான விஜயா (57) என்பவரும் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு அருகில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 3 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அருகில்உள்ள மற்றொரு வீ்ட்டிலும் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்