< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
7 Dec 2022 3:17 PM IST

திருக்கழுக்குன்றம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதர்கூடம் ஊராட்சி எடையூர் கிராமத்தில் பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வாரத்துக்கு 3 முறை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி, தங்க ஆபரணங்கள் மற்றும் பீரோவில் இருந்த தங்க நகை உள்பட 20 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மரற்றும் கோவில் வெளியே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்