< Back
மாநில செய்திகள்
பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
திருச்சி
மாநில செய்திகள்

பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
12 April 2023 1:40 AM IST

பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூர்:

பாய்லர் ஆலை ஊழியர்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 52). இவர் பாய்லர் ஆலை நிறுவனத்தில் தர கட்டுப்பாடு அளவையராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் பெங்களூருவில் உள்ள தங்களது மகளை பார்ப்பதற்காக கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் கடந்த 9-ந் தேதி இரவு அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் இரும்பு கதவின் பூட்டு மற்றும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, இதில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது பற்றி ராமச்சந்திரன் உடனடியாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்