< Back
மாநில செய்திகள்
கடலூரில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயம்
மாநில செய்திகள்

கடலூரில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயம்

தினத்தந்தி
|
29 July 2023 3:49 PM IST

கடலூரில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் காயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்