< Back
மாநில செய்திகள்
20 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம்
மாநில செய்திகள்

20 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினத்தந்தி
|
26 Sept 2022 1:18 AM IST

சேலம் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 23 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 8 பேர், சேலம் ஒன்றியம், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 3 பேருக்கும், தர்மபுரி மற்றும் கடலூரில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், ஈரோட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்