< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
தென்காசி பஸ் நிலையத்தில் 20 நவீன கண்காணிப்பு கேமராக்கள்
|20 Jun 2023 12:15 AM IST
குற்றங்களை தடுக்கும் வகையில் தென்காசி பஸ் நிலையத்தில் 20 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தென்காசி புதிய பஸ் நிலைய பகுதியில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் 20 அதிநவீன வசதி கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பஸ்கள் உள்ளே வரும் இடத்திலும், அவை நிற்கும் இடத்திலும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதனை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வம், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.