< Back
மாநில செய்திகள்
குடிநீர் உறிஞ்சிய 20 மின்மோட்டார்கள் பறிமுதல்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

குடிநீர் உறிஞ்சிய 20 மின்மோட்டார்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
6 Oct 2023 2:03 AM IST

நெல்லை, பணகுடியில் குடிநீர் உறிஞ்சிய 20 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை மாநகர பகுதிகளில் வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்து இருந்தார். இதனை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேற்று மாநகர பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது 48-வது வார்டு ஞானியரப்பா பெரிய தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டு 6 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பணகுடி சிறப்பு நிலை பேருராட்சி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாம்பன்குளம், திருஇருதய தெற்கு தெரு, திரு இருதய மேலத்தெரு, ஜக்கம்மாள் கோவில் தெரு பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சிய 14 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்