< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஆண்டாங்கோவில், பஞ்சமாதேவி பகுதிகளில் 20-ந்தேதி மின்நிறுத்தம்
|17 Sept 2023 12:18 AM IST
ஆண்டாங்கோவில், பஞ்சமாதேவி பகுதிகளில் 20-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வேப்பம்பாளையம், பாலம்மாள்புரம் ஆகிய துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வேலுச்சாமிபுரம், கோதூர், கோவிந்தம் பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, சத்திரம் பவித்திரம், பாலம்மாள்புரம், ஐந்து ரோடு, மார்க்கெட், அரசு காலனி, பஞ்சமாதேவி, பூந்தோட்ட காளிபாளையம், கருங்கல்காலனி, அம்பானி கார்டன், அருகம்பாளையம், அண்ணா காலனி, வாங்கப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.