< Back
மாநில செய்திகள்
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சத்தில் 20 பேட்டரி வாகனங்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சத்தில் 20 பேட்டரி வாகனங்கள்

தினத்தந்தி
|
21 July 2023 7:10 PM IST

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் 20 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரக்காடு, சோழவரம், சோத்துபெரும்பேடு, பூதூர் உள்பட 8 கிராம ஊராட்சிக்கு தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ரூ.50 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 20 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி அனைவரையும் வரவேற்றார். மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் தலைமை தாங்கி பேட்டரி வாகனங்களை ஒரக்காடு ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ் உள்பட 8 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்