< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|7 Sept 2022 2:39 AM IST
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தகராறு செய்து, ஓட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் முத்துகிருஷ்ணன்(வயது 24) என்பவரும், ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்ற சுதாகர்(36) என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முத்துகிருஷ்ணன் மீது வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகளும், சுதாகர் மீது 2 வழக்குகளும் நிலுவையில் இருப்பதோடு, இவர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.