< Back
மாநில செய்திகள்
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
22 Oct 2023 12:24 AM IST

மது வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக மது குற்றத்தில் ஈடுபட்டு வந்த வேப்பந்தட்டை தாலுகா, காரியானூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரையின் மகன் ரமேஷ் (வயது 31), கள்ளப்பட்டியை சேர்ந்த தேவராஜூன் மகன் சிவாஜி என்ற சிவாஜிராவ் (28) ஆகிய 2 பேரை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் ரமேஷ், சிவாஜிராவ் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று ரமேஷ், சிவாஜிராவ் ஆகியோரை மாவட்ட கலெக்டர் கற்பகம் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ரமேஷ், சிவாஜிராவ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் அவரது குழுவினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

மேலும் செய்திகள்