< Back
மாநில செய்திகள்
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
13 Aug 2023 5:37 AM IST

நெல்லையில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சீவலப்பேரி போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட உதயனேரி, கட்டளை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முப்பிடாதி (வயது 23), பண்டாரம் என்ற பாஸ்கர் (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, முப்புடாதி, பாஸ்கர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் நேற்று வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்