வேலூர்
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|கொலை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த சின்ன பாலம்பாக்கம், கும்பங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்கள் குமரவேல் (வயது45), ரமேஷ் (41). அண்ணன்- தம்பிகள். இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. அதன்காரணமாக குமரவேலின் மகன் அருண்குமார் (23), கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி தனது நண்பர்களான குடியாத்தம் அடுத்த தட்டப்பாரையை சேர்ந்த விக்னேஷ், ஹரி, கார்த்திக் ஆகியோருடன் சென்று ரமேஷை தாக்கினர் இதில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்குமார், விக்னேஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அருண்குமார் மற்றும் விக்னேஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருண்குமார், விக்னேஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.