< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்பூரில் ஓடும் ரெயிலின் முன்பு செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் ரெயில் மோதி உயிரிழப்பு
|3 July 2023 4:22 AM IST
ரெயில் மோதி தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் ஆகிய 2 இளைஞர்கள் அணைப்பாளையம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலின் முன்பு இருவரும் செல்வி எடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து இருவரும் ரெயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். இதில் பாண்டியன், விஜய் ஆகிய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.