திருச்சி
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
|மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்.
கொள்ளிடம் டோல்கேட்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூரை சேர்ந்த சேகரின் மகன் விக்னேஷ்(வயது 26). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள அய்யன் வாய்க்கால் கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த வேலுச்சாமியின் மகன் குமரன்(22), முகமது ஜின்னா மகன் ரியாஸ் (22) ஆகியோர் விக்னேசின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து குமரன், ரியாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.