< Back
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
4 Feb 2023 1:23 AM IST

அம்பையில் போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அம்பை:

களக்காடு கேசவன் நகரை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 20). இவர் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றாகவும், இதற்கு களக்காடு வடக்கு தெருவை சேர்ந்த முரளி (27) என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி விசாரணை மேற்கொண்டு, சுரேந்தர், முரளி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்