தூத்துக்குடி
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
|தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அன்னை தெரசா காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கணேஷ்குமார் (வயது 28). இவர் கடந்த மாதம் 29-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளை பாலவிநாயகர் கோவில் தெருவில் நிறுத்தி சென்று உள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது.
இதுகுறித்து கணேஷ்குமார் மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முத்தையாபுரம் தோப்பு தெருவைச் சேர்ந்த மகசப் பாஷா மகன் முகமது பஷீர் என்ற முகமது இப்ராகிம் (24) என்பவர் கணேஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து முகமது பஷீரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் அஜய்குமார் (24) இவர் கடந்த 13-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளை சிதம்பரநகர் பகுதியில் நிறுத்திச் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது.
இதுகுறித்து அஜய்குமார் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சந்திரவிகாஷ் (27) என்பவர் அஜய்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்திரவிகாசை கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.