< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
|11 Oct 2023 12:15 AM IST
வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம்
பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் ஓடியந்தல் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனித்தனியாக இருசக்கர வாகனங்களில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழிமறித்தனர். விசாரணையில் அவர்கள் தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் காலனியை சேர்ந்த சரவணன் மகன் சஞ்சீவி(வயது 23) மற்றும் பழைய பலகச்சேரி ராஜ்பிள்ளை மகன் ஹரிவண்ணன்(20) என்பதும், அவிரியூர் கிராமம் ராமர் மகன் முத்துக்குமரவேல்(31), மையனூர் கிராமம் பூபதி மகன் அய்யனார்(22) ஆகியோரின் மோட்டார் சைக்கிளை திருடி வந்த போது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.