< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
மின்மோட்டார் ஒயர்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
|11 July 2023 10:02 PM IST
ஆற்காடு அருகே மின்மோட்டார் ஒயர்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் பெரியகுக்குண்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு, விவசாயி. இவர் தனது நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.
அப்போது சுமார் 100 மீட்டர் மின்சார ஒயர் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து அவர் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் இன்று சந்தேகப்படும்படியாக திரிந்து கொண்டிருந்த 2 பேரை ஆற்காடு தாலுகா போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் புன்னபாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 23), அத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (20) என்பதும், சேட்டு நிலத்தில் மோட்டார் ஒயர்களை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.