< Back
மாநில செய்திகள்
ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

குன்னம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் டவுன் பகுதி குபேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி சுபாஷினி (வயது 37). இவர் ராமலிங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது பாலாம்பாடி அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுபாஷினி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து சுபாஷினி அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாளையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன்குமார் (23), திருச்சி தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தரணி (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு சங்கிலி பறிப்பு, கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 15 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்