< Back
மாநில செய்திகள்
பெண் போலீஸ் ஏட்டுவிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

பெண் போலீஸ் ஏட்டுவிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
29 Jun 2023 11:00 PM IST

திருப்பத்தூரில் பெண் போலீஸ் ஏட்டுவிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் டவுன் தில்லை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளமதி (வயது 29). தர்மபுரியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பணி முடிந்து திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலீஸ் ஏட்டு இளமதி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பதித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிசென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஏட்டு இளமதி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சங்கிலியை பறித்து சென்றது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் (25), ஹரி என்கிற கணபதி (35) ஆகிய இருவரும் போலீஸ் ஏட்டு இளமதியிடம் சங்கிலி பறித்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்