< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
|14 Oct 2023 11:47 PM IST
அரக்கோணம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிகளில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேடல் காந்திநகர் திரவுபதி அம்மன் கோவில் பின் புறத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 21), வேடல் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கருணாகரன் (28) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.