< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
|20 Sept 2023 2:45 AM IST
நெல்லையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏ.ஆர்.லைன் ரோடு ராஜேந்திரநகர் சந்திப்பு பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும் படியாக 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாளையங்கோட்டை புதுபேட்டை வடக்கு தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் சுடலைமுத்து (வயது 25), மேலப்பாட்டம் வடக்கு தெருவை சேர்ந்த திருமலைநம்பி மகன் இசக்கிதுரை (28) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.