< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
13 Oct 2023 11:57 PM IST

வாலாஜா அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் முசிறி ரோட்டில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் டாஸ்மாக்கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சென்னசமுத்திரம் மலைபேட்டையை சேர்ந்த ராஜசிம்மன் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் கன்னிக்கோவில் அருகே வாலாஜாபேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த நந்தகுமார் (24) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்