< Back
மாநில செய்திகள்
விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 11:20 PM IST

விவசாயியை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே முனியத்தரியான்பட்டி பகுதியில் வசிக்கும் கந்தசாமி மகன் கண்ணுச்சாமி(வயது 39). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் மகன் ரமேசுக்கும் பரணம் மதுப்பானக்கடையில் தகராறு ஏற்பட்டது. உடனே ரமேஷின் சித்தப்பா குமாரின் மகன்கள் வசந்தகுமார்(27), சாந்தகுமார்(22) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கண்ணுச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கண்ணுச்சாமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கண்ணுச்சாமி புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வசந்தகுமார், சாந்தகுமார் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்