தென்காசி
கடையில் புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது
|சிவகிரி அருகே கடையில் புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிப்பட்டணம் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 40). இவர் பஞ்சாயத்து அலுவலகம் முன் பழக்கடை மற்றும் பழ ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.10 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக தேவிப்பட்டணம் தேவர் மணல் மேட்டுத் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யனார் (19), இதேதெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் தங்க முனீஸ்வரன் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.எல்.பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி கே.எல்.பிரியங்கா விசாரணை செய்து இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பின்னர் 2 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.