< Back
மாநில செய்திகள்
ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
26 Feb 2023 12:15 AM IST

நாமகிரிப்பேட்டையில் ஜவ்வரிசி ஆலையில் மின்மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பச்சமுத்து (வயது 58). இவர் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். தற்போது ஜவ்வரிசி ஆலை செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் தொழிற்சாலையில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பச்சமுத்து ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில்

சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து மின் மோட்டாரை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வந்தார். இந்தநிலையில் அந்தபகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது ராசிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்ரம் (21), மற்றொருவர் முருகேசன் மகன் பெரியசாமி (30) என்பதும் இவர்கள் 2 பேரும் மின்மோட்டார் திருடியது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்