< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்

2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
21 Sept 2022 12:15 AM IST

குற்றாலத்தில் மோட்டார்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது

தென்காசியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் குற்றாலத்தில் தங்கும் விடுதி, கோழிப்பண்ணை மற்றும் கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ளது. இந்த பண்ணையில் தண்ணீர் எடுப்பதற்காக 3 மோட்டார்கள் பொருத்தி இருந்தார். சம்பவத்தன்று இவற்றை காணவில்லை. இந்த திருட்டு குறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாதன் வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் தாமஸ் நடத்திய விசாரணையில் மேலகரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் ரவிக்குமார் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன் (25) ஆகியோர் இதனை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமஸ் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார்களை மீட்டார். இந்த மோட்டார்களின் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.


மேலும் செய்திகள்