< Back
மாநில செய்திகள்
ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
1 Oct 2023 12:15 AM IST

வெண்ணந்தூர் அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அருகே உள்ள மாட்டுவேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 52). இவர் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை தோட்டத்தில் இரவு கட்டி வைத்திருந்த நிலையில், மோட்டார் சைக்களில் வந்த மர்மநபர்கள் 2 பேர்் ஆட்டை திருடி சென்றனர். அதை பார்த்த குமரேசன் அக்கம்பத்தினர் உதவியுடன் ஆட்டை திருடிய 2 பேரையும் பிடித்து வெண்ணந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அத்தனூர், எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்த குமார் மகன் சர்மா (26) மற்றும் அத்தனூர், ஆயிபாளையம், தேவேந்திரர் தெரு பகுதியை சேர்ந்த நடேசன் மகன் லோகேஷ் (23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லோகேஷ், சர்மா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்