< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வருமான வரி தாக்கல் செய்யாத தனியார் நிறுவன பெண் இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை - எழும்பூர் கோர்ட்டு தீர்ப்பு
|14 Sept 2023 10:39 AM IST
வருமான வரி தாக்கல் செய்யாத தனியார் நிறுவன பெண் இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை எழும்பூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2013-14-ம் ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை தாக்கல் செய்யாத பி.என்.ட்ராசெம் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனத்தின் இயக்குனர்களான பவநாராயணன், வாணிதேவி ஆகியோர் மீதும் வருமான வரி சட்டத்தின் கீழ் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, பி.என்.ட்ராசெம் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.மேலும், நிறுவனத்தின் இயக்குனர் வாணிதேவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மற்றொரு இயக்குனரான பவநாராயணன் விசாரணையின்போது இறந்து போனதால் அவருக்கு எதிரான குற்றத்துக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.மேற்கண்ட தகவல் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.