< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பெண்ணை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை
|5 Sept 2023 1:15 AM IST
பெண்ணை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை வழங்கப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி ஜோஸ்பின் (வயது 35). மானகிரி தில்லை நகரை சேர்ந்தவர் ரகுநாதன் (45). இவர்களுக்கு இடையே முன்விரோதம் உண்டு. அதன் காரணமாக ரகுநாதன், ஜோஸ்பின் வீட்டிற்கு சென்று அங்கே தனியாக சமையல் செய்து கொண்டிருந்த ஜோஸ்பினை உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கினார். கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பலத்த காயமடைந்த ஜோஸ்பின் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, ரகுநாதனுக்கு 2 ஆண்டு சிறை தணடனை விதித்து தீர்ப்பளித்தார்.