சேலம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளர்கள் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
|சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளர்கள் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்,
பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மகன் மாதேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (37). இருவரும் கூலி தொழிலாளர்கள்.
இவர்கள் 2 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி, 6 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் தேவூருக்கு அழைத்து சென்று மிட்டாய் வாங்கிக்கொடுத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று 2 பேரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.
சிறை தண்டனை
இது குறித்து சிறுமியின் பெற்றோர் தேவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதேஷ், செல்வராஜ் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.