< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் பயணியிடம் சங்கிலியை பறித்த 2 பெண்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு
|12 Aug 2022 1:14 AM IST
ஓடும் பஸ்சில் பயணியிடம் சங்கிலியை பறித்த 2 பெண்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூருக்கு நேற்று மாலை ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது எசனை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு பெண் பயணியின் அருகே இருந்த 2 பெண்கள் சேர்ந்து தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனை கண்ட அந்த பெண், சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து, அவர்களிடம் இருந்து சங்கிலியை கைப்பற்றி பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தார். பின்னர் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். அந்த பெண் பயணி புகார் தராததால், அந்த 2 பெண்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.