< Back
மாநில செய்திகள்
2 பெண்களிடம் நகை பறிப்பு
மதுரை
மாநில செய்திகள்

2 பெண்களிடம் நகை பறிப்பு

தினத்தந்தி
|
8 May 2023 1:15 AM IST

மதுரையில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.

மதுரை பரவை பவர்ஹவுஸ் சாலையை சேர்ந்தவர் சுந்தரி (வயது 60). இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விளாங்குடி கொண்டை மாரியம்மன் கோவில் அருகே அவர்கள் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் சுந்தரி அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபோல், அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகவல்லி (65). இவர் சித்திரை திருவிழா எதிர்சேவை பார்ப்பதற்காக ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்